எமது இலக்கு
கண்கவரும் அழகியகிராமத்தில் புகழ் படைத்தமக்கள் வாழும் இலங்கையில் முன்னணியில் திகழும் பிரதேசசெயலகப்பிரிவாகஆக்குதல்.
எமதுபணிக்கூற்று
செழிப்புமிக்க மக்கள் சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கு ஏற்ப தேவையான சேவைகளை மக்களுக்கு வழங்கி தொடர்புபடுத்துதல்.பௌதீக இடஅமைவு
பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலாளர் பிரிவானது இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இப்பிரிவின் வடக்குமற்றும்
மேற்கில் “கங்கவட்ட”பிரதேச செயலகம் எல்லையாக அமைந்துள்ள அதேவேளை தெற்கில் “தெல்தோட்ட” பிரதேச செயலகப் பிரிவு அமைந்துள்ளது. இப்பிரிவு நுவரெலிய மாவட்டத்தைச் சேர்ந்த “ஹங்குரன்கெத்த” பிரதேச செயலகத்தால் பிணைக்கப்பட்டுள்ளது. அத்தோடு கிழக்கில் “மாஓய” வினால் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவானது 84.26 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவில், கடல் மட்டத்தில் இருந்து 500 – 1500 மீ நீண்டுள்ளது. இப்பகுதியின் அகலாங்கு 70– 8’மற்றும் 70– 16’’ஆகவும், நெட்டாங்கு 800– 37’’ மற்றும் 800– 96’’ ற்க்கு இடையிலும் அமைந்துள்ளது. இப்பிரிவு ஒரு மலைப்பாங்கான மற்றும் சாய்வான வடிகால் அமைப்பைக் கொண்ட ஒரு விவசாய பகுதியாகும். மேலும் நெல், மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை என்பன பொருளாதார பங்களிப்பினை வழங்குகினறது. 73 கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவின்கீழ் நிர்வாக செயற்ப்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் மற்றும் கலாசார பார்வை
ஹங்குரங்கெத்த மலைத்தொடர் சிறந்த சுற்றுச்சூழலியல் அழகினை வழங்குவதோடு உள்ளுர் மட்டத்தில் காலநிலை மற்றும் வானிலையை சீரிய முறையில் பேணி வருகின்றது. தலாத்துஓயாவின் நிலையானஓட்டம் நகரை இரம்யமானதாகவும், கண்கவரும் இடமாகவும் பேணிவருகின்றது.
கண்டி ஸ்ரீ தலதா பெரஹர நிகழ்வும் அதனோடு தொடர்புடைய கலை மற்றும் கலைஞர்களுடனான இயற்கை கலாசார சூழலை மெருகூட்டுகின்றது. உடுவெலகலைத் தலைமுறையுடன் தொடர்புடைய கலைஞர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள இலங்கை கலாசார அடையாளத்தை அங்கீகரிக்கும் பிரிவு முழுவதும் தங்கியுள்ளனர். நீளவல கிராமம் பித்தளை மற்றும் சில்வர் செதுக்கல்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கும் படியான கலைதாங்கலைக் கொண்டது. இலங்கையின் ரஜமஹா விஹாரைப் பட்டியலில் முதலாவதாக இடம் பெறுகின்ற “சகம ரஜமஹாவிஹார” யினை கொண்டுள்ள பிரதேச சபையாகவும் திகழ்கின்றது. அத்தோடு ‘பஸ்கம’, ‘ஹன்தான’ மற்றும் ‘தலாவ’ ரஜமஹாவிஹாரைகளைகொண்டுள்ளமையால் சமயரீதியானமுக்கியத்துவம் கொண்டபகுதியாகவும் திகழ்கின்றது. சகம ரஜமஹா விஹாரையில் முன்னெடுக்கப்படும் “கிரிபதபத்ர பூஜா” அலலது “அலுத் சஹல் மங்கல்ய” என்று கூறப்படும் நிகழ்வானது இப்பிரதேசத்திற்கு தனித்துவம்மிக்க கலாசார பெறுமதியினை வழங்குகின்றது. பஸ்கம ஸ்ரீ நாததேவாலயத்தின் வருடாந்த ஊர்வலம் மற்றுமொரு தனித்துவமான கலாசார அம்சமாகும்.
பாத்தஹேவாஹெட்ட வெவ்வேறு காலகட்டகளில் வெவ்வேறு பட்டபெயர்களால் சுட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சகமதொர, சகம் ரட்ட, சகம் நுவர, சகம, சகம ஜெம் தனாய போன்ற நாமங்களால் அழைக்கப்பட்டுள்ளமை குறித்து “ஹரிஸ்பத்துவமெதவல” கல்வெட்டில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. பிற்பட்டகாலங்களில் எகொடபொத மற்றும் மெகொடபொத, எகொடபனே மற்றும் மெகொடபனே,எகொடதெடி மற்றும் மெகொடதெடி எனவும் அழைக்கப்பட்டதாகவரலாற்று குறிப்புகள் சான்று பகர்கின்றன.
வரலாற்று தகவல்களை பகுப்பாய்வு செய்யும் போது பாத்தஹேவாஹெட்ட எனும் பெயரானது பல்வேறு கோணங்களில் விபரிக்கப்படுகின்றது. எல்லை புத்தகங்களான “The Boundary book of Sri Lanka” மற்றும் “The Boundary book of Three Sinhala” இப்பகுதியினை “ருகுணு” ஆட்சிக்கு உட்பட்டதாக குறிப்பிடுகின்றது. ருகுணு வில் 42 பட்டிணங்கள் இருந்துள்ளன. 4 – 5 பட்டிணங்கள் ஹேவாஹெட்ட பிரதேச செயலகத்திற்கு சொந்தமானவை. அவை, “சங்கமரட”, “பஸ்கமரட”, “கொடரட” மற்றும் “மத்துரட”. இது பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகம் “சகம் ரட” மற்றும் “பஸ்கம் ரட” ஆகியவற்றின் பகுதியை அடிப்படையாகக் கொண்டது. இங்கு சகமரடபத்து சேவை கிராமங்களை கொண்ட கம் தெகேகோரலே என்றும், இருபதுசேவைக் கிராமங்களை கொண்ட பஸ்கமரடஹேவாவிஸ்ஸ கோரலே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு குறிப்பிட்ட சேவை கிராமத்திற்க்கு சேவை செய்யும் பல்வேறு சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்களால் ஆன கிராமங்களை “சேவை கிராமங்கள்” என வழங்கும் தன்மை இருந்து வந்துள்ளது.
தற்போது பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகம் தலாத்துஓய நகரில் அமையப் பெற்றுள்ளது. தலாத்துஓயவின் வரலாற்று தகவல்களையும், நாட்டாரியலையும் அறிவது இங்கு அவசியமானது. நாட்டாரியல் என்பது ஒரு சுவாரஸ்யமான இலக்கிய பகுதியாகும். அதனை இங்கு நிராகரித்து வரலாற்றை இனங்காண முடியாது. ஆரம்பகாலங்களில் தலாத்துஓய “தலாட்டுவ” என்று அழைக்கப்பட்டுவந்தள்ளது. இன்றும் பண்டயகாலமக்கள் “தலாட்டுவ” என்றே அழைக்கின்றனர்.
தலாத்துஓய ஹந்தான மலைத்தொடரைச் சேர்ந்தது. இவ் அருவியானது ஹந்தான ரஜமஹாவிஹாரையின் அருகேபாய்ந்து, குருதெனியவிற்க்கு ஊடாக மகாவலி ஆற்றினை சென்றடைகின்றது. அருவியானதுதான் செல்லும் பாதையில் “அத்துல்கம”, “உடுவெல”, “நெஹினிவெல”, “தலாத்துஓய”, “படகல” மற்றும் “வெல்தம்பல” போன்ற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கான நீரை விநியோகித்துச் செல்கின்றது.
“தலாத்துஓய” எனும் பெயர் உருவானமை குறித்த செவிவழிக் கதைமிகவும் சுவாரஸ்யமானது. முன்னொரு காலத்தில் உடுவெல வயல்வெளியில் பெண்கள் சிலர் ஒன்றாகசேர்ந்து அறுவடை செய்துகொண்டிருந்த வேளையில் திடீரென காற்றுடன் கூடிய மழை பொழிந்தது. அந்நேரத்தில் குறித்த பெண்கள் “தல் அத்து”என்று சொல்லப்படும் பனை இலைகளை தங்களது தலை நனையாதவாறு பிடித்து கொண்டிருந்தவேளையில் அவை காற்றின் வேகத்தால் வீசப்பட்டுஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அப்போது அப் பெண்கள் “தல் அத்து அடித்துச் செல்லப்படுகின்றது” எனகூச்சலிட்டுள்ளனர். தல் அத்து அடித்துச்செல்லப்பட்ட ஓயா என்பதால் “தல் அத்துஓயா” என்று பெயர் பெற்றுள்ளது. பிற்பட்டகாலத்தில் அது மறுவி “தலாத்துஓயா” என்று பெயர்ப்பெற்றதாக கூறப்படுக்ன்றது.
(இத் தகவல்களை தொகுத்து வழங்கிய கொடமுன்னயைச் சேர்ந்த திரு. எச்.எம்.எ.பி. ஹேரத் மற்றும் ஹேவாவிஸ்ஸயைச் சேர்ந்த திரு. டி.பி. வீரசிங்க அவர்களுக்கும் நன்றி)
பிரதேசசெயலகத்தின் கடமைகளின் தன்மை
- நிறுவன அலுவலக தொழிற்பாடு
- அரசியலமைப்பு தொழிற்பாடு
- ஒருங்கிணைத்தல் தொழிற்பாடு
- அபிவிருத்தி தொழிற்பாடு
- சமூக சேவைகள் தொழிற்பாடு
- நிலம் தொடர்பான தொழிற்பாடு
- முகாமைத்துவ பலப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி மேம்பாடு
|
இல |
இருந்து |
வரை |
பதவி |
பெயர |
|
01 |
1990.05.08 |
1991.11.30 |
பிரதேச உதவி அரசாங்க அதிகாரி |
திரு. டபிள்யூ. விக்ரமரத்ன |
|
02 |
1991.12.01 |
1992.08.20 |
மேலதிக உதவி அரசாங்க அதிகாரி |
திரு. டபிள்யூ. விக்ரமசிங்க |
|
03 |
1992.08.21 |
1995.08.01 |
பிரதேச செயலாளர் |
திரு. எஸ்.டி. பத்திரன |
|
04 |
1995.08.02 |
1997.01.19 |
பிரதேச செயலாளர் |
திரு. கே.டபிள்யூ. செனவிரத்ன |
|
05 |
1997.01.20 |
2000.08.31 |
பிரதேச செயலாளர் |
திரு. எஸ்.விக்ரமபாகு |
|
06 |
2000.09.01 |
2002.02.28 |
பிரதேச செயலாளர் |
திரு. எம்.டி. பன்துல செனரத் |
|
07 |
2002.03.01 |
2006.10.15 |
பிரதேச செயலாளர் |
திருமதி. விமலா மகுல்தெனிய |
|
08 |
2006.10.16 |
2007.07.26 |
பிரதேச செயலாளர் |
திரு. டீ. காமினி முனசிங்க |
|
09 |
2007.07.27 |
2012.07.28 |
பிரதேச செயலாளர் |
திரு. ஜு.எச். ஜயவீர |
|
10 |
2012.08.01 |
2013.05.30 |
பிரதேச செயலாளர் |
திரு. டீ. காமினி முனசிங்க |
|
11 |
2013.06.01 |
|
பிரதேச செயலாளர் |
திருமதி. மதுபானி பியசேன |
|
12 |
2020.05.27 |
|
பிரதேச செயலாளர் |
திருமதி. எச்.கே.சாகரிகா தில்ஹானி |















